Tuesday, 9 August 2016

திருக்கோவிலூர் கீழையூர் சிவன் கோவில்

ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் இரண்டாம் ஸ்தலம்


 காமனை எரித்தது, ப்ரம்மனின் சிரம் கொய்தது என சிவபெருமானின் வீர லீலைகள் எட்டு ஆகும். இந்த தலங்கள் வீரட்ட தலங்கள் என பெயர் பெறுகின்றன.
வீரட்ட தலங்கள்
அதில் இரண்டாவது லீலை அந்தகாசுரனை வதைத்தது.

அம்மன் சன்னதி கோபுரம்

இரண்டாவது வீரட்டானம் எனப் போற்றப் பெறுவது திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள சிவன் கோவில்.


உற்சவ மூர்த்தி

அனுக்ரஹ மூர்த்தி

லிங்கோத்பவர் மற்றும் கல்வெட்டு குறிப்புகள்

ஸ்ரீ பெரிய யானை கணபதி

ஸ்ரீ ஆணவ சம்ஹார மஹா பைரவ மூர்த்தி




ஸ்ரீ பைரவி



நுழைவு தூணில் உள்ள சிற்பம்

ஸ்ரீ தஷிணாமூர்த்தி

Fresco on the wall ஸ்ரீ விஸ்வரூப கணபதி

சிவன் கோபுரம்




திருக்கோவிலூர், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே சுமார் நாற்பது கிமீ தூரத்தில் உள்ளது. தஷிண பினாகினி எனப்படும் தென்பெண்ணை கரையில் இக் கோவில் அமைந்துள்ளது.




அந்தகாசுரன் வதம்:


              அன்னை ஸ்ரீசிவானந்தவல்லி விளையாட்டாக ஒரு முறை சிவபெருமானின் கண்களை மூட அகில உலகமும் அஞ்ஞானத்தால் இருண்டது. அந்த பேரிருளில் இருந்து அந்தகாசுரன் உண்டானான்.
அவனை அழிக்க சிவ பெருமான் எட்டு திசைகளிலும் திசைக்கெண்மராக மொத்தம் 64 பைரவராக தோன்றினார். அதனால் மஹா பைரவ மூர்த்தி என்ற பெயர் பெற்றார்.

           அந்தகாசுரன் ரக்தபீஜன் என்பதால் பூமியில் விழும் ஒவ்வொரு இரத்தத் துளியும் இன்னொரு அந்தகாசுரனாக வடிவெடுத்தன. அதைத் தடுப்பதற்காக அன்னை காளி தோன்றி கீழே இரத்தம் சிந்தாமல் அவற்றைப் பருகி அருளினாள். அதனால் அவள் பைரவியாக உயர்வு பெற்ற ஸ்தலம் இது.

         பூமியின் பெண் தன்மை, மீறி விழும் இரத்தத் துளிகளோடு கலந்து மீண்டும் அந்தகாசுரன் உருவாவதைத் தடுக்க வாஸ்து புருஷன் தோன்றி பூமியின் மேற்புறத்தை மறைத்துக் கொண்டார். வாஸ்து புருஷன் தோன்றிய திருத்தலம் இதுவே ஆகும்.

         போரின் போது அசுர குரு சுக்ராச்சாரியார் மீண்டும் மீண்டும் அசுரர்களை மரணத்திலிருந்து உயிர் பெறச் செய்ய, கோபம் கொண்ட சிவன் சுக்ரனை விழுங்கி விடுகிறார். மூவாயிரம் ஆண்டுகள் சிவனுக்குள்ளேயே இருந்து ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து சிவனின் கருணையினால் மீண்டும் சுக்கிரனாக வெளியில் வந்தார். அதனால் சுக்கிரபுரீஸ்வரன் என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு.

          அந்தகாசுரனை வதைத்ததால் சுவாமிக்கு ஸ்ரீ அந்தகாசுரவத மூர்த்தி என்ற பெயரும் உண்டு.

          தேய்பிறை அஷ்டமியன்று இந்த சம்ஹாரம் நடைபெற்றதால் இந்தக் கோவிலில் தேய்பிறை அஷ்டமி மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் 64 தீபமேற்றி கோவிலை 64 முறை வலம் வர எல்லா பாவங்களும் அகலும் என்பது திண்ணம்.

         எதிரிகள், எமபயம், வாஸ்து தோஷம் ஆகியவை நீங்க மேற்கண்ட பரிகாரத்தை செய்தால் வெற்றி நிச்சயம்.

         மேலும் வம்பு வழக்குகள் வியாஜ்ஜியத்தில் வெற்றி பெறவும், திருமண தடை மற்றும் வியாபார தடை நீங்கவும் தேய்பிறை அஷ்டமி பூஜை நல்ல பலனைத் தரும்.

ஸ்ரீ பெரிய யானை கணபதி:


         சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை ஐராவதத்திலும், அவருடைய நண்பரான சேரமான் குதிரையிலும் கைலாயத்தை நோக்கி புறப்பட, அதைக் கேள்வியுற்ற ஔவையார் தானும் அவர்களோடு கலந்து கொள்ள விரும்பி விநாயகர் அகவலை வேக வேகமாகப் பாடி இத்தலத்து கணபதியை பூஜிக்க, இறைவன் தோன்றி மெதுவாகச் செய்யும்படி கூறினார்.


உற்சவர்

          அதன்படி பூஜை முடிந்தவுடன் விநாயகர் விஸ்வரூபம் கொண்டு தன் துதிக்கையாலேயே ஔவைப்பிராட்டியாரை, மற்றவர்கள் கைலாயம் சேரும் முன், கொண்டு போய் சேர்த்தார்.

           அதனால் அவருக்கு பெரிய யானை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.

துர்க்கையின் சிறப்பு:


       போரில் சிவனுக்கு உதவி, நற்பெயர் பெற்றதால் இங்கே உள்ள துர்கை மந்தகாசப் புன்னகையுடன் காணப்படுகிறாள். இயற்கையாகவே வெண்கரு விழிகளோடு துர்க்கை அருள்வது இங்கே சிறப்பு ஆகும். நம்மை அருள் நிறையப் பார்ப்பது போலவே இருக்கும் இந்த துர்க்கையின் முகம்.

மற்ற சிறப்புகள்:


     அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப் பெற்ற நடு நாட்டுத் திருத்தலம் இது.

     நாயன்மார்களில் மெய்ப்பொருள் நாயனார் மற்றும் நரசிங்க முனையரையர் ஆகியோர் அவதரித்த பெருமை கொண்டது இந்த திருத்தலம்.

     அருணகிரிநாதர் இங்குள்ள முருகனின் மேல் பாவநாரிகள் எனத் தொடங்கும் திருப்புகழை பாடியிருக்கிறார்.

     தலவிருஷம் சரக் கொன்றை ஆகும்.   
    
    இக்கோவில் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. மேற்கு பார்த்த கோவில் ஆயிரம் சிவன் கோவிலை வணங்கியதற்குச் சமம் என்பது ஐதீகம்.

     இறைவிக்கு ஸ்ரீ சிவானந்தவல்லி, பிரகந்நாயகி அம்மை, பெரிய நாயகி என்ற பெயர்களும் உண்டு.

     பயமின்றி வாழ இத்தலத்து இறைவனை தரிசித்து அவன் அருள் பெறுவோம்.

அருகில் உள்ள மற்ற திருத்தலங்கள்:

        திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில், அரகண்டநல்லூரில் உள்ள அதுல்யநாதேஸ்வரர திருக்கோவில், ஆதி திருவரங்கம் எனப் போற்றப்படும் திருவரங்கம் சுமார் 20 கிமீ, ரிஷிவந்தியம் சுமார் 20 கிமீ. திருவெண்ணை நல்லூர் சுமார் 20 கிமீ.

Friday, 5 August 2016

KUBERAN Tamil Story

குபேரன் தமிழ் கதை

நீங்கள் என் நண்பராக இருந்தால் தயவுசெய்து இதைப் படிக்காமல் இருந்துவிடாதீர்கள்.

என்னோடு நண்பராக ஆக விரும்பினாலும் அப்படியே.

நான் இதை சொல்லவில்லை என்று எதிர்காலத்தில் என்னிடம் குறைபட்டுக் கொள்ளாதீர்கள்.

கண்டிப்பாக இதைப் படித்துவிடுங்கள்.

மற்றவர்களுக்கும் இதை சொல்லுங்கள்.

என்னோடு இருங்கள்:  எதிர்காலம் நமக்கு.

குபேரன் தமிழ் கதை இங்கே

Tuesday, 26 July 2016

An Infamous Devotee Tamil

Hello Friends


         தமிழில் நான் எழுதிய இந்த கதையை கீழ்க் கண்ட லிங்க்கில் படித்து மகிழுங்கள்.

          தமிழ் கதை An Infamous Devotee

Friday, 15 July 2016

Non Starting Story


                                                            அத்தியாயம் 1

    மரங்கள் நிறைந்த பகுதியின் மத்தியில் அமைந்திருந்தது அந்த சிவன் கோவில். சற்று தூரத்தில் சலசலத்தபடி ஓடும் ஆறு. கால் நனைக்கும் அளவிற்கே இன்று அதில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

    சிவன் கோவிலுக்கான பாதை ஒரு ஒற்றையடிப் பாதை மட்டுமே. ஊரைவிட்டு தள்ளியிருந்ததாலும், வேறு மதங்கள் தழைத்தவண்ணம் இருந்தமையாலும் அதிகம் மக்கள் யாரும் வருவதில்லை. பிரதோஷ தினத்தைத் தவிர வேறு யாரும் வருவதேயில்லை என்று கூடச் சொல்லலாம்.

    பகலில் வெறும் பட்சிகளின் சப்தம் மட்டுமே. வேறு ஒலியே இருக்காது. உண்மையில் சொல்லப் போனால் பகலில் கூட அந்த அமைதி நமக்கு பயத்தையே ஏற்படுத்தும்.

    கோவிலில் கூட்டம்தான் வராதே தவிர கோவிலின் தலபுராணச் சிறப்பிற்கும் கலையம்சம் பொருந்திய சிற்பங்களுக்கும் குறைவே இல்லை. சிற்பங்களின் அழகையும் கம்பீரமான தூண்களையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

    கோவிலுக்கு உள்பிரகாரம்  மிகவும் பெரியது. ஒரு பிரதஷிணம் வர ஐந்து நிமிடங்களாவது ஆகும். இரண்டாவது பிரகாரத்தை சுற்றி இரண்டு ஆள் உயரத்திற்கு மதில் சுவர். கோவில் ஒரு கோட்டையைப் போல. உள்ளே நுழைந்துவிட்டால் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.

    இன்னும் சொல்லப் போனால் இந்தக் கோவில் பயத்தைப் போக்குவதற்கான பரிகாரம் செய்து கொள்ளக் கூடிய கோவில்.

    நேற்றுவரை அந்தக் கோவிலில் இரண்டு பேர் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று முதல் நிலைமை மாறிவிட்டது. முதலில் யார் அந்த இரண்டு பேர்?

    கோவிலின் வெளிப்புற மதிலை ஒட்டி ஒரு சிறிய குடில் இருந்தது. வயதான ஒரு குருவும் பதினாறு வயது நிரம்பிய ஜம்பு என்ற இளைஞனும் அங்கு தங்கியிருந்தார்கள். அப்படிச் சொல்வது கூட சரியில்லை. பெரும்பாலான நேரங்களில் கோவிலில்தான் இருப்பார்கள். ஏதோ சிறிது நேரம் இரவில் உறங்குவதற்கு அந்த குடிசை பயன்பட்டது. பல நாட்களில் கோவிலின் உள்ளேயே இரவில் தூங்கிவிடுவார்கள், இறைவனின் பெருமையை பேசியவண்ணம்.

    குருவின் உண்மை பெயர் யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லா வித்தைகளிலும் வல்லவர். வைத்திய சாஸ்திரத்திலும் ஜோதிட சாஸ்திரத்திலும் பெரும் நிபுணர். அவ்வப்போது ஊர் மக்கள் வந்து அவரை பல்லக்கில் அழைத்துக் கொண்டு செல்வதுண்டு. எங்கிருந்தோ வந்து சேர்ந்த ஜம்பு அவருடைய சீடனாகிப் போனான். அவன் வந்து ஆறு ஆண்டுகளாகிவிட்டன.

    அவரிடமிருந்து அவன் எல்லா சாஸ்திரங்களையும் கற்று தேர்ந்துவிட்டான். மிக இரகசியமான சில விஷயங்களை அவன் கற்றுக் கொள்ள ஆரம்பித்த காலத்தில்தான் அது நிகழ்ந்துவிட்டது. காம சாஸ்திரத்துடன் இணைந்து ஞானத்தை அடையும் வித்தையை அவன் கற்றுக் கொள்ள ஆரம்பித்த போதுதான் நடக்கக் கூடாத அந்த விஷயம் நடந்துவிட்டது.

    இளமையும், புதிய உணர்ச்சிகளும், ஞானத்தின் முதற்படியும் அவனுக்கு பெரும் உற்சாகத்தையும், ஆர்வத்தையும், ஆனந்தத்தையும் அளித்து வந்தன. அவற்றை முறையாக கற்று முடிப்பதற்கு முன்னர், நேற்று முன்தினம் நடந்த அந்த சம்பவம் அவனை பெரிதும் பாதித்துவிட்டது. அவனுடைய துர்பாக்கியம்தான் என்ன?

    இந்த ஆனந்த வித்தையை, பரவசத்தில் திளைத்தபடி, எளிதில் அஷ்டமாசித்திகளையும்,ஞானத்தையும் அடையக் கூடிய அந்த வித்தையை இனி அவனுக்கு யார் கற்று தரப் போகிறார்கள்?

    எல்லாம் முடிந்துவிட்டது. அவனுடைய குரு நேற்று முன்தினம் சமாதி அடைந்துவிட்டார். இப்போது அந்த பிரதேசத்தில் அவனும் சிவனும் மட்டுமே. இனி இறைவன் விட்ட வழி...!
                ****************************

I do not know why this is happening. I started this story about three years ago. This is not evolving beyond the first chapter. May be God does not want me to reveal all the secrets to the public - Not yet.

Monday, 11 July 2016

Lexical Masters

                                 Lexical Masters an Android App

   We have produced a vocabulary building app in Android.

This app gives the direct meaning from the dictionary. No need of internet connection after installing.

 You can also choose to learn 3,5 or all the different meanings for the same word as available in the dictionary.

 Audio support for word pronunciation is given.

Words are arranged into different levels of lists according to difficulty.

 The Free version works only ten minutes for a day.

 Please Buy the Pro version to enjoy unlimited time and the last four levels of difficulty.

 Please download it from the Google Play Store -- Lexical Masters

Download Lexical Masters Here 
 
 

Thursday, 23 June 2016

Iniyellam Sogamae


                                                  இனியெல்லாம் சோகமே....!

இன்று::

    "ஏய்! நாம்ப இங்கே சந்தோஷமாய் இருப்போம்தானே. யாரும் நம்பளை ஒண்ணும் செஞ்சிடமாட்டாங்களே!" குரல் நடுங்கிக் கொண்டே அவள் கேட்ட இடம் சுத்தமான காடு.

    "கவலைப்படாதே. வீரப்பனைத் தவிர வேற யாரும் இங்கே வந்ததில்ல." அவன் அவள் தோளைத் தொட்டு அணைத்தபடி சொன்னான்.

    இருவரும் மெல்ல நடந்தார்கள். தரையில் பனியின் ஈரம் இன்னும் இருந்தது. கீழே கிடந்த சருகுகள் மிதிபடாமல், சத்தம் காட்டாமல் அவர்கள் நடந்தார்கள். பறவைகளின் ஓலம் இனிமையாய் இருந்தது. பச்சை மரங்களின் வாசம் மூக்கைத் துளைத்தது. பக்கத்திலிருந்த மலைகள் எங்கோ ஓடிக் கொண்டிருந்த மேகங்களை இழுத்து நிறுத்தியிருந்ததில், சூரியன் காணாமல் போயிருந்தான்.

    "எனக்கென்னமோ பயமாய் இருக்குடா. திரும்பவும் என் அண்ணண் வந்து ஏதாவது செய்வானோ"

    "ச்சேச்சே! அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது. நம்ப காதல் இனி நிறைவேறும். அதற்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். சில மோசமான முடிவுகள் எடுத்ததுகூட அதனால்தானே. இனியெல்லாம் சுகமே. கமான், சியர் அப்!"

    "அதோ அங்கே பாரு, ஒரு பாழடைந்த குடிசை."

    "ஆமாம், இனிமே அதுதான் நம்ம வீடு."

    "ஓ.கே." வலது கை கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு இருவரும் அந்த வீட்டை நோக்கி ஓடினார்கள்.

    ஏனோ அவர்களைக் கண்டதும் மரங்களில் இருந்த ஆந்தைகள் அலறின. குடிசையில் இருந்த வௌவால்களின் அலறல் அவர்களை வித்தியாசமாய் வரவேற்றது.

                                                                *******************

என்றோ::

    சுத்தமான இருட்டில் அவன் நடந்து கொண்டிருந்தான். முகம் காதல் போதையால் சந்தோஷமாய் இருந்தது. விசிலடிக்க வேண்டும்போல் இருந்தது. அந்த ஆற்றின் ஓரத்தில் நடந்துகொண்டே அவன் விசிலடிக்க ஆரம்பித்த போதுதான், அவனுக்கு பரிச்சயமான அந்தக் குரல் கேட்டது. "ஏய், நில்லுடா!"

    குரல் கேட்டதும் புரிந்துபோனது  ஆள் யாரென்று. காதலியின் அண்ணன். இப்படித்தான் அடிக்கடி வந்து மிரட்டுவான் என் தங்கையை பார்க்காதே, பேசாதே என்று. காதலின் அருமை புரியாத மடையன்.

    "ஏண்டா! உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா. கீழ்ச் சாதியில் பிறந்த உனக்கு என் தங்கை கேக்குதா. மவனே, உன்னைக் கொலை பண்றது ஒண்ணுதான் என் குடும்ப மானத்தைக் காப்பாற்ற வழி."

    என்ன ஏது என்று உணர்வதற்குள் கத்தியை ஓங்கி வயிற்றில் குத்தினான். அவசரமாக விலகினான்.

    வயிற்றில் இரத்தம் பெருக, காதலியின் முகம் நினைவில் வந்தது. தன் வயிற்றில் இருந்த கத்தியை ஒரே மூச்சாய் பிடுங்கி, விலகி ஓட ஆரம்பித்திருந்த காதலியின் அண்ணனை நோக்கி வீசினான்.

    அன்றைய தினத்தில் மொத்தம் மூன்று பேர் செத்துப் போனார்கள். மூன்றாவதாய், சாவிலேயாவது காதலனுடன் சேர்வோம் என்று கண்ணுக்குத் தெரியாத உயிரை காணமல் போக்கினாள் காதலி.

                                                                *********************

இன்று::

    அவர்கள் இருவரும் குளித்துவிட்டு திரும்பி வந்தபோதுதான் பார்த்தார்கள், அவர்கள் தங்கள் வீடு என்று நினைத்த குடிசை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவளுக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது. யார் இதைச் செய்தார்கள் என்று நிமிர்ந்து பார்த்த போது அவளின் அண்ணன் நின்று கொக்கரித்துக் கொண்டிருந்தான் 'உங்களை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுவேனா' என்று.

    "ச்சே! செத்த பிறகும் கூட நிம்மதி இல்லையே" என்று அவள் அவன் தோளில் சாய்ந்தபடி அழ ஆரம்பித்தாள்.

                                                                   *********************

இன்றைக்கு இனிமேல் நடக்கப்போவது::

    மாமல்லபுரத்தின் நீளமான கடற்கரையில் ஒரு இருட்டான இடம். பாத்திமா அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், "அரவிந்த்! நம்ப கல்யாணத்துக்கு வீட்லே ஒத்துக்கமாட்டேன்னுட்டாங்க. மீறினா கொன்னு போட்ருவோம்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. ஆனா எனக்கு நீ வேணும். சாவுக்குப் பிறகாவது இந்த மனிதர்கள் தொல்லை இல்லாமல் நிம்மதியாய் சேர்ந்து இருப்போம். வா, செத்துப் போகலாம்."

    அவன் மெல்ல தலையசைத்தான். இருவரும் முத்தமிட்டுக் கொண்டார்கள்.

    கைகோர்த்தபடி ஏதோ நம்பிக்கையுடன் இன்னும் கடலின் ஆழமான பகுதியை நோக்கி நடந்தார்கள்....,

                                                                   ****************************

Wednesday, 22 June 2016

Ithuvum Nadakkum...


                                                    இதுவும் நடக்கும்....

    படீரென்று ஏதோ உடைபடும் சத்தம் கேட்டவுடன் திடீரென்று விழித்துக் கொண்டாள் ஜெயந்தி அம்மாள். ஊருக்கெல்லாம் செல்லமாக ஜெ.அம்மா.

    இந்த நேரத்தில் என்ன சப்தம்?

    பயத்தில் வியர்வை ஆறாய்ப் பெருகியது.

    மகன் செத்துப் போன கொஞ்ச நாட்களாகவே இந்த மாதிரிதான் அமானுஷ்யமாய் ஏதோ நடக்கின்றது.

    சுவிட்சைப் போட்டாள். கரண்ட் சர்வ சுத்தமாய் செத்துப் போயிருந்தது.

    கரண்ட் இல்லாததால் இன்னும் பயம் அதிகமாகிப் போக - புருஷனை எழுப்பினாள். அவர் சீக்கிரத்தில் எழும்புவதாய் இல்லை. பாவம் அவரும்தான் என்ன செய்வார். பகல் முழுவதும் வேலை. இரவில்... ம், சொல்வதெற்கென்ன! ஒரு ஆட்டம் ஆடியாகிவிட்டது.

    மெல்ல எழுந்து தேடித் தேடி மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி, மாடியை அடைந்தாள்.

    ஏதோ நடமாடும் சப்தம்.
    டொம்...,டொம்...,

    உடலின் அத்தனை பாகங்களும் நடுங்க...,
    இன்னும் மேலே... இன்னும் மேலே....,

    பீரோவின் முன் கண்ணாடி சுக்கு நூறாய் உடைந்திருந்தது. பக்கத்தில் பீங்கான் சில்லுகள். யாரோ பீங்கான் கப்பை எடுத்து வீசி பீரோவின் கண்ணாடியை உடைத்த மாதிரி.

    என்ன ஏதென்று இன்னும் கொஞ்சம் கிட்டே நெருங்குவதற்கு முன் - எங்கிருந்தோ வீசிய ஊதக்காற்று கையிலிருந்த விளக்கின் ஒளியை கொலை செய்தது.

    திடீரென்று ஏதோ வாசனை.
    மண்வாசனையா?

    நினைக்கும் முன் சடசடவென்று மழை பெய்ய ஆரம்பித்தது.
    தாழம்பூ வாசனை....? அதேதான். என் மகனுக்கு மிகவும் பிடித்த வாசனை.

    நொடியில் அந்த வாசனை மாறியது. ஏதோ பிணத்தை எரிப்பது போல்....,

    அலறி அடித்தபடி, வேகமாய் படிகளில் தடதடத்து, உயரமிழந்து, கணவனை உலுக்கி எழுப்பினாள்.

    "என்னம்மா, என்ன விஷயம்...?"

    நடந்தத்தனையும் சொன்னாள்.

    "ஏங்க! ஒரு மாசத்துக்கு முந்தி நம்ம ஊருக்கு ஒரு மந்திரவாதி வந்திருந்தாரே... அவர் சொன்னபடி பரிகாரம் செஞ்சுடுவோங்க."

    "என்ன சொன்னார் மந்திரவாதி.....?"
    சொன்னாள்.

    அதைக் கேட்டவுடன் அவர் கபகபவென்று சிரித்தார். "போடி பைத்தியம். அவனவன் நூறு கோடி ரூபாய் செலவில் கல்யாணம் பண்றான். நீ சொல்றது புதுசா இருக்கு."

    "ஏங்க சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த காலத்துலயும் உங்களுக்கு நான் தேவைப்படறேனே."

    "ஏய் போடி, பேயும் இல்லை. ஒண்ணும் இல்லை. ஆவி உலகத்தைப் பற்றி நான் நம்ப தயாராய் இல்லை" சொல்லி முடித்த வினாடி அவருக்கும் அந்த மணம் வீசுவது போல் தோன்ற -

    "ஏண்டி, ஏதோ மல்லிகைப் பூவாசனை வீசலை."

    வாசனை மாற, மாற....,

    அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது.

    "சமய சந்தர்ப்பங்கள் சரியா வந்தா, நீ சொல்ற மாதிரி வேணா செஞ்சு பார்க்கலாம்" என்றார் சோகையாய்.

    அவர்கள் இருவரும் அன்று இரவு முழுவதும் உறங்கவேயில்லை.

                *********************

    அவர்களின் நல்ல காலமோ என்னவோ -

    மூன்று வாரங்களுக்குப் பின்னர் பதினேழு வயது நிரம்பிய மாயாவதி என்ற அந்த பருவப் பெண் ஆற்றின் சுழலில் சிக்கி செத்துப் போனாள்.

    முதலில் பெண் வீட்டார் ஒத்துக் கொள்ள மறுத்தாலும், ஜெயந்தி அம்மாளின் பிடிவாதமான வேண்டுகோளுக்கிணங்க ஒப்புக் கொண்டனர்.

    பனிரெண்டு மணியான நட்ட நடு நிசி இரவில், அந்த சுடுகாட்டில், மிகச் சிலரின் முன்னிலையில்....

    செத்துப் போன மாயாவதிக்கும், ஆறு மாதங்களுக்கு முன் செத்துப் போன ஜெயந்தி அம்மாளின் மகனுக்கும் திருமணம் விமரிசையாய் நடந்தது.

                **********************

    நம்பினால் நம்புங்கள். இப்பொழுதெல்லாம் ஜெ அம்மாளின் வீட்டில் 'அந்த' மாதிரி சப்தங்கள் எதுவும் கேட்பதில்லை.

Saturday, 18 June 2016

Saturday, 11 June 2016

Power within Thoughts -- Part III

        Power within Thoughts -- Part III

    "Are you in earnest; seize this very minute; what you can do or dream you can, begin it; boldness, has genius power and magic in it; only engage and the mind grows heated; begin, and then the
work will be completed."

                                           
                                                                             Johann Goethe.

    The keener, the more urgent and repeated the picture of the desired goal on the screen of your mind, the faster it is accepted by the subconscious.

    Prioritize and put down on paper your short, medium and long term goals. Words when spoken or written from your inner core contain potency of the highest order. To verify this simply note
the positive effect that you feel as you read these words.

    To become creatively effective we need to mentally, choose, accept and radiate a vivid image of our clarified desire. Whatever you dare to radiate and deliberately entertain mentally, you will attract physically.

    Let us explore the creative process, of bringing out something new into being. Creativity is the most basic manifestation of a man or woman fulfilling their being in the world. Let us see what actually happens within consciousness during the creative act.

    The first thing we notice in a creative act is that it is a passionate encounter. The essential feature during any creative act is the degree of absorption, or what we know as being completely
immersed in , the degree of intensity where in there must be a specific quality of total engagement, being caught up in or wholly involved with a particular idea. What we call being wrapped up in, or entirely enveloped by, to the extent that we might become quite obvious to things around or the passage of time.

    During an intense creative encounter, we experience quickened heartbeats, and increased intensity of vision. Genuine creativity, by whatever name one calls it, is characterised by an intensity of
awareness, a heightened consciousness, a vibrant vitality and total committed purpose, whereby you and your ideal fuse as one. These are some of the emotions that accompany heightened awareness, which go on to culminate in the actual experience of actualising one's own potentialities. We cannot will creativity or force valuable insights. But we can will to give ourselves totally to the encounter, with intensity of purpose which flowers into zeal and commitment. Creativity is the meeting of the intensively conscious human being with his or her world.

    All of us use expressions such as 'a thought pops up' and 'an idea from the blue' etc. These are various ways of describing a common experience: the breakthrough of ideas form some depth below the
surface level of conscious awareness. Exploring our deeper mind has a fascinating relationship to creativity. I call it our source origin and later reservoir of ideas, which awaits being unlocked, so as to
emerge to our conscious surface as illuminating insights. Even as the mighty Ganges is forever full only because of its origin source the Goumukh which perennially feeds it.

    Allowing the process by which creative thought impulses from the deeper mind rise up to the surface mind as breakthroughs is what needs to be facilitated. However, once the subconscious provides you with its unique insights, it is imperative to follow through on those ideas with conviction. Even though at that time, they might appear to our limited conscious minds as having no special significance or logical connection. We often shy away from our own best ideas, when they come to mind. Many brilliant ideas
go unborn this way. The fear of failure has always been a stumbling block to many. But look at what Edison did with his failures. This is what Thomas Watson, IBM's founder, has to say on failure, "The way to succeed is to double your failure rate." With the right attitude, failure can be used to your advantage as that springboard capable of catapulting you to a new phase of your most creative work. Did you know that Flemming's mind was alert enough in discovering Penicillin, from an unknown mold that blew in through his window? Equally remarkable were the sudden discoveries of Roentgen's X-Rays and Edison's Photo Electric Cell.

    In examining creativity and how our subconscious operates, take the example of the rich and varied experiences of the great mathematician of the late nineteenth and early twentieth century, Jules Henri Poincare. In his autobiography Poincare tells us with admirable clarity how new insights and ideas came to him and describes vividly the circumstances surrounding one of his breakthroughs. In which he established the existence of a class of Fuchsian functions, those which come from the hyper geometric series. He distinguished four phases of creativity as Preparation, Incubation, Illumination and Verification.

    The most obvious is that creative flashes and insights do not come unsought. The first step always point towards a long conscious mental struggle to organise a logical body of ideas to solve a problem. After the arduous, exhausting search in the consciousness, the often discouraging pursuit of solutions, the mind turns to other things and suddenly a fruitful solution leaps into consciousness.

    The insight often cannot be born until the conscious tension and conscious application is relaxed. Intermittent periods of stillness, contemplation and solitude are of the essence to enable a
breakthrough of creative ideas. After intense application to the problem, thinking about it, struggling with it, it becomes vital to have periods of relaxation and tranquility, where you do something totally different, or switch off, and go closer to nature. Einstein once asked a friend in Princeton, why is it I get my best ideas in the morning while I am shaving? The optimum condition for creative ideas is the mood of quiet intuitive concentration, when you are inward-turned.

    To enable breakthroughs to come up, alternate period of intense committed conscious work along with phases of complete relaxation, are essential thereby enabling the creative insight to emerge at a moment of transition between work and relaxation, which may last from minutes, months or years, fruitful novelties are generated by the conscious mind when focused elsewhere, on other projects perhaps even on a pleasure trip. But below the level of consciousness, useful and beautiful ideas are being continually tabulated and combined by the subliminal self, which present themselves as ideas to our mind.

    Such insights from the subconscious never come as hit and miss, but in accordance with a pattern of which one essential element is our own commitment. The insight is born from the subconscious exactly in the area in which we are most intensively committed. Such breakthroughs involve a heightening of sensory, experience which Poincare called a subjective conviction or immediate certainty, which clicks in the mind. The most important factor Poincare points out as to why only a particular insight precedence over any others, is that consciousness singles out immediately certain harmonious ones, that are at once useful and beautiful.I look upon the real process by which thoughts unfold into events, when acted upon earnestly, as surely as the sun must rise, or the moon reach its full. The visions that you nurture within you will gravitate toward -even like iron filings are drawn to a magnet. Your visions  are the blueprints from which must emerge the crowning success of your endeavors. Each of us only becomes what we think. Our experiences are so intimately inter-woven as a core part of our thoughts, even as a wave is only a part of the ocean.

    To effect that quantum leap forward, in the right direction, will need our becoming more sensitive to these vast dimensions. I realise there may never be, what we call Q.E.D's in minds oceanic realm. Exploring and using even a part of its creative wonders will always be an ongoing discovery for thinking beings. The arena of mind holds within it fathomless possibilities. Tapping even a  fraction of these is what professionals today need give serious thought to.  Staying with the known is always comfortable, yet actualising the move toward the unknown is where useful breakthroughs await discovery. It is here that we can actualise our full potential and fulfill our higher purpose. While it is a simple procedure to calculate the number of seeds in an apple, who among us can ever say how many apples and orchards reside dormant within a single seed? So too is it with every inspired thought.

        ( Concluded )
   
    The writer, Cyrus, is a consultant in motivation and creative imagination, Pune.

Friday, 10 June 2016

Power within Thoughts -- Part II

        Power within Thoughts -- Part II

    "Success favors the prepared mind."     Louis Pasteur.

    The greatest power of thought vibration also move undetected by our eyes. Yet we rely so heavily on our limited external physical senses.


    However, immense power has always been a part of the formless world. We place too much emphasis on the tangible, visible world of form and think of ourselves solely as form and being made up of mere bone and music. The external visible form only comprises one percent of what we really are. The core part of our potential being is a source deep within, where resides the ninety-nine percent of each of us. This formless inner space is where 'You' are uniquely 'You'. This is our no -limit -to -accomplishment creative zone, where you are master to think.

    The third thought concerns all that we perceive as solid in the world from a pen to the largest structures. Nothing is solid. The pen for instance was earlier a thought in someone's mind, as an electric
impulse. Much later did it become what we know as a pen. All things that we create must first go through this invisible thought phase and then to their outer visible form. All visible solid objects  when viewed under a microscope appear to be alive with dancing molecules and subatomic particles vibrating a little
less than the speed of light. We live in an ocean of thoughts which travel through our ether as subtle vibration, even as light. photons and sound waves do. The study of quantum physics and quantum
mechanics reveal that the tiniest subatomic particles work with incredible perfection, to a synchronized pattern. We are also a part of this perfect pattern. Gary Zukav in his book  'The Dancing Wu Li Masters' gives a fascinating study of quantum reality:  "Subatomic particles constantly appear to be making decisions. The decisions they seem to make are based on decisions made elsewhere. Subatomic  particles know instantaneously what decisions are made elsewhere, and elsewhere can be as far away as another galaxy."

    All that we ever need is suspended, invisible to the naked eye in this electromagnetic library of vibrations. Hooking into this source of knowledge, by becoming receptacles to harness creative energy
from the myriad shafts of light that ceaselessly move around us, will always be a vast realm, that awaits our tapping. Each time you view television, the clarity of the picture or image corresponds to the
transmission beam as also to the degree of how finely your set is tuned. The mind is similar in many ways, yet infinitely more fascinating in its working, as each of our individual experiences with it will clearly show.

    Dreams come true when we channel creative cosmic energy from a higher source, by becoming attuned to guidance from the universal mind. There are many who do the possible, but right
within us is also built the desire fulfilling drive, to turn such dreams into reality. Only that, will remain impossible to man which in his mind he believes to be so.

    Dreams::
    A Dream is a persistent thought or idea which envelops and holds you from your deepest depths. Dreams take firm root in the minds of those who pursue an ideal. When you think, breathe and
become one with the dream and act on your ideas by trusting intuition, you will be led to live the dream.

    By becoming open -minded and receptive enough, many wonderful adventures will unfold and be working through you. At this juncture, we find the crucial  testing period of all big dreamers, when obstacles appears on your path. Once we press on and come out of the tunnels of these many, sometimes seemingly hopeless trials, will we in that moment emerge resilient, victorious and strong. Everywhere in our world, the law of duality operates with immaculate precision. Knowing the justice with in this law, will always be a tremendous spur for anyone sensitive to its working. Wherever there is nadir, there is a corresponding zenith just awaiting to be tapped. All lows must only lead to highs.

    True creative power and inspiration reside hidden in the simplest of things all around us. Like Arctic  Tern's annual migration flight of ten thousand kilometers, which it does with amazing ease, in spite
of no known navigation aids. We tend to make things complex by searching outside of ourselves, when the solutions to all our needs remain within us. In getting the subconscious to work creatively on your behalf, it is the essence to doing what you love and loving what you do. What is it that when you do, you feel immeasurably fulfilled, and while you are doing it, time seems non existent. Most wonderful within man is the harmonious working of the conscious and subconscious mind. I cite two comparisons to reveal how our mind process vivid thought images into their outer physical equivalent. The process by which seeds burst through enriched, prepared earth, and grow forth after their kind when tended, as one example which brings out the amazing likeness between thoughts and seeds. The best way to look upon your subconscious is as a garden, and yourself as it gardener. The subconscious is like the soil where the seeds of all kinds grow freely when cultivated. The law that governs photography is another striking example. Our conscious mind is exactly like a camera lens, and the subconscious is like the negative where all photographed images get impressed. All positives are only as clear as negative.

    The conscious mind is the rational, logical, surface level of mind, whose primary function is the thinking and reasoning faculty. It takes cognizance of the world by our five outer limited senses. Imagine a huge circle, a mile in diameter, and you making a tiny niche on its circumference, and you will know how limited our conscious faculties are when compared to the subconscious. The conscious mind is mechanical, negative and non-creative. Often it holds one back from putting to test any of our out -of -the -ordinary ideas. It might even remind you how some thing great cannot be done. All mental picture that you focus upon in the conscious mind expand in consciousness and attract similar energy. The  conscious  minds greatest power is exercised when we put a fine mesh to filter into consciousness only magnetic thoughts, of events as you would ideally like them. To change circumstances, first form a finished picture in your mind of how you would actually have circumstances be. We often hold pictures of what we do not want. By holding positive images you draw corresponding results. Thoughts are highly magnetic and the universe is acutely sensitive to your thoughts. From the book, 'Auto biography of a Yogi' I quote a powerful line that Sri Lahiri Mahesaya spoke to his disciple Sri Yukteswar " Whatever your powerful mind believes very intensely would instantly come to pass. Thought is a force even as electricity or gravitation."

    The Subconscious Mind::
    To waken the creative alms, we need to tap the awe -inspiring working of the subconscious. The subconscious is located just behind the solar-plexus, and is sometimes also referred to as the abdominal brain. It is the irrational level of the mind. This phase of the mind, governs independently, twenty four hours a day, all our vital inner processes like the beating of our hearts, breathing, digestion and assimilation. Its working is not limited by time or space dimensions. The subconscious takes cognizance of its environments by means independent of the physical senses. It perceives by intuition and its higher faculties of telepathy, clairvoyance, clairaudience and the sixth sense. It talks to us through hunches, inspirational flashes or insights to follow a certain course of action.

    In order to illustrate its power, here's an example. Prior to falling asleep, firmly tell your subconscious that you need specific goal accomplished. You will discover that forces within you will be generated, leading to the desired result with clock-work precision. At night as you drop into the realm of sleep, and enter the unconscious, all vital systems are regulated by its infallible working. All thought impulses that we think, feel and believe in the conscious mind , sink via a process akin to osmosis into our 'deeper mind'. These thought images once programmed into the subconscious are accepted by it as a command. Hypnosis clearly demonstrates that when given a specific suggestion, the subject acts it out perfectly. The subconscious positive or negative commands:  The subconscious is highly sensitive to the dominant thought in the conscious mind.

    The subconscious performs its highest functions most brilliantly when the conscious mind is relaxed and quiet. When in the conscious you get that certain wonderful feeling, that your work has finally been done. When every image of internal conflict and fear has evaporated, it paves a path for the subconscious to get your goal. Deep conviction, that goes through every fibre of your being is most propitious to set the subconscious work powerful results for you. The runways of the mind once cleared, provide a path for the  smoothest take-offs and landings of all your projects.

    Basic Imaging Techniques:
    The optimum time for impregnating the subliminal is fifteen minutes prior to falling asleep, and just before awakening. During these periods, the biggest  outcropping of the subconscious occurs,
and the negative conscious faculty is submerged to a large extent. The mind is deeply relaxed at these periods, when slower alpha brain waves are produced which are conducive for creative ideas to emerge. In your minds-eye assemble and create a true to life 'finished mental picture' of and ideal condition or event, that you would like to experience. Focus steadily on this picture, color and sharpen it to a heightened vividness and clarity. Envision this as a present reality, not a future time possibility. During the creative process think and feel 'it is settled' not 'will it happen?' Your auditory visual and  kinesthetic faculties must all be brought into play, whereby you not only see, but also hear, feel, taste and touch your goals quite naturally and effortlessly. By imaging, thinking and feeling as though the event is a current reality, you cause a change in subconscious acceptance, which will accept your image.

    (To be Concluded.....)

Thursday, 9 June 2016

Power within Thoughts - Part I

        Power within Thoughts - Part I

    "If one advances confidently in the direction of his dreams and endeavours to live the life which he has imagined, he will meet with a success unexpected in common hours."


                                                  Henry David Thoreau (1817 - 1862)

    Imagination is that vibrant, magnetic doorway with in man's subtler being to vast creative realms. To which, if we are sensitive and receptive, through listening-in can speak and lead us unerringly to seek and fulfill our higher purposes.

    It is truly awesome when one thinks of the myriad fascinating sensing faculties that God has built within each of us, awaiting discovery, development and focus toward higher calling. Our imagining faculty can be defined as a process by which we create mental pictures in our mind's eye. In fact , the process by which we envision and formulate goals within, long before they are actually achieved, is the play of our controlled imagination.

    Our entire thought processes and feelings are in fact a series of  photographic images which flow through the mind. As you read these ideas, images are formed in your mind. All that we do, say, read, write, dream or feel, evolve as thoughts in the mind. Thoughts form mental pictures on our inner screens. We produce and direct the pictures that run through our mind. These pictures govern our attitudes and performance. The ability to choose, control and discipline one's imagination positively is our greatest creative power.

    One truth that I've come upon, is to keep uppermost in consciousness a vivid picture of circumstances as you actually want them to be. We often do just the reverse.

    Imagination is that magical theater with in your inner space where you can fashion, mould and bring alive your grander dreams. Even as Van Gogh first set alight the creative spark from deep with in as an intangible thought and let this feeling envelop and flow through him till it became a flaming need, that he could give it tangible, visible expression as dazzling sunflowers or breathtaking irises.

    Or bring to mind the stupendous magnitude of the mission within the inspired physicist Stephen Hawking, who, in spite of a crippling nerve disorder, continues to unravel the mysteries of our universe, though permanently confined to special wheel chair.

    Or remember Thomas Edison who, when young, was removed from school, his teacher pronouncing he had an addled brain. Much later, this mind converted ten thousand experiments into the birth of incandescent lamp.

    Or Beethoven who transmuted deafness into grand symphonies which transport many into flights of sheer rapture.

    Through time, inventors, scientists, captains of industry, explorers, artists, philosophers, poets and the common man have at some point in their lives become inspired with an ideal, and have fine tuned it into a higher plane of consciousness, by holding steadfast to their vision. They were guided  and graced in time, to present humanity with great works, which have illumined the hearts of many down the centuries. Positively such achievers applied the wise counsel of Victor Hugo's famed words "Nothing is powerful than an idea whose time has come." The work of such achievers always live on as a grand testimony and tribute for generations to awaken in their hearts even some part of that indomitable missionary frontier zeal and fiery spirit which dared reach for even the sun.

    What factors influenced their minds  to become magnetized toward an all consuming ideal? Do  beings of such stature breathe a different air, pray to another God? or does thicker blood course through their veins? What gave the gumption, strength of character and enthusiasm to press on and convert setbacks into great opportunities? And transform near impossible odds into platforms for higher accomplishment.

    It was Thomas Carlyle who said that, "Obstacles in the pathway of the weak becoming stepping stones on the pathway of the strong." Here one is reminded of the oyster in the ocean depths who silently transforms pain, through effort, when a grain of sand enters into a lustrous pearl. Or when miniscule ants go on to build towering structures many times their size. Or the industrious bee who engineers quite ingeniously intricate honeycombs. Never do oysters, ants or bees, ever attend any advanced training courses of seminars to perfect the work they do.

    While all our traits come inbuilt within each of our unique DNA codes, I believe that a positively primed imagination dynamic will and the latent power  within the subconscious when awakened, hold a major part of the answers to the earlier questions raised. Yet the greater part of the answers by far will reveal that such achievers have that certain ability to channel into a higher power source by becoming attuned and receptive to the creative cosmic energy. And allowing its free flow through their entire being.

    Take for instance the brilliant French Chemist Dr.Emile Coue who, in 1910, shook the world when he said that, " When the will and imagination  are in conflict it is always the imagination that wins." Here is a simple example to vividly portray the upper hand of imagination which enables it to overrule will power. If asked to walk across a bridge, you would do so easily enough. But if asked to walk in a narrow twelve inch beam, forty feet high, stretched across two buildings  the answer would be different. As even if your will power may urge you to take on the challenge should your imagination visualize or picture you falling, then despite the promptings from your will, you will not even attempt that walk. How clearly this illustrates Dr.Coue's valuable finding. Virtually everything you do is a result of the thought image, held in mind before attempting it.

    Along with your will, had you formulated a clear image of your successful unencumbered walk across, then you would have surely succeeded. When the forces of dynamic will and positive imagination coincide, as one in harmony, you generate tremendous power, culminating in peak performance, consistently.

    Just think about the fact, that no matter what your circumstances, the manner in which you think and react to them within, is an intangible area, over which you can exercise total control. To my mind this will always be the mightiest lever which professionals can further hone.

    The quality of picture images that we choose to paint and run within the deeper recesses of our minds, is the actual software source from which originate the blueprint that later actualize into experiences in the external world. Our outer experiences are only a reflection of what we habitually develop and hold firm within. You are the producer, director and actor of the pictures that run through the mind. All inner thoughts, which are in fact causes, mature and transform into outer effects of what we know as circumstances. Effects always have have root centers embedded in a cause. Thomas Carlyle put it aptly when he said, "Instead of saying that man is the creature of circumstances, say that man is the architect of circumstances."

    For professionals to achieve outstanding success in the upper echelons in any field of human endeavor, it is imperative to first tap the incredible dormant creative energy forces within the subconscious. Today, a thorough understanding of the creative power and the laws which govern its smooth operation will enable professionals to blaze trails of an altogether new awareness. And spur teams in fulfilling corporate needs head on, with added dynamic impact and enhanced effectiveness. As Emerson said, "Every great and commanding movement in the annals of the world is triumph of enthusiasm."

    When the imagination is trained with belief, desire and heightened expectancy, where you can visualize and feel your goals as if they had already materialised, then you will attain your objective. Two outstanding illustrations are found in the stories of Alexander the Great, and Napoleon Bonaparte. In Alexander's day an oracle proclaimed that whoever unloosened the Gordian Knot would rule all Asia. Many tried the conventional way, but to no avail. Alexander with one stroke of his sword cut the knot, and rose to great power. Napoleon when a child was given a star sapphire, with the prophecy that it would make him emperor of France. The power of repeated suggestion and the courage to act on your convictions are formidable forces within us, that lead to accomplishment.

    The only limitations in our minds, are the blocks that we see there. The single biggest damper to the creative flow of ideas is the negative thought pattern of fear. To overcome this irrational feeling, using the 'as if' principle is of inestimable value. To activate this dynamic principle, act 'as if' you already are so, and you will become exactly that. Theodore Roosevelt once said, "There were all kinds of things I was afraid of at first, But by acting as if I was not afraid, I gradually ceased to be afraid." 


   The surest method to overcome fear is to go ahead and do the very thing you fear, and you will have conquered it. Woodrow Wilson was so right in stating " We have nothing to fear, but the feeling of fear itself." Fear is a negative picture image in the mind. If you switch the negative with a more positive picture, you can eliminate fear.

    Our world is propelled harmoniously by exacting natural laws. There are laws governing the flow of atoms, photons and waves.We have laws that govern physics and mathematics. The mind also operates on incredibly exacting, scientific laws.

    Try focusing on the following thoughts and principles. The first is that nothing in our world is more magnetic, more powerful than an intensified, focused thought. A single clarified thought from your mind contains within it unsurpassed power when linked to a specific purpose. Thought is the fountainhead  from which all the higher powers of your mind flow. We all are the direct result of a thought. We relate to everything on our planet through thoughts.You cannot so much as have a feeling, without first having a thought. Thoughts are much more than something that you do. Thought is in fact 'who' and 'what' you are. Just try not thinking for a while and you will see that thought is something we are inextricably linked to. It is not what is in the world that determines the quality of our lives, but how we choose to process our world via our thoughts. Our circumstances only reveal the kind of images we have chosen until now. The mind stores away all the images that we elect. All knowledge and thoughts achieve dynamic impact when acted upon.

    This is where thoughts get converted into 'things'. How fascinating to realize that all things have to be first accomplished within our minds . For a moment, if you put aside the planets, the oceans of all nature, then whatever else is left in our world will be as a direct result of thoughts from our minds. So astounding is the power within thoughts, I like the way Sir James Jeans put it, " The universe begins to look more like a great thought, than a great machine." Benjamin Disraeli's stirring message to us was ,"Nurture great thoughts, for you will never go higher than your thoughts." And Shakespeare sums it so aptly, " There is nothing either good or bad, but thinking makes it so."

    The second thought concerns the visible world of form, and the invisible world of the formless. Think about our eyes, which even when wide open, can only see up to a limited extent. If you, at this moment, covered your eyes with your palm, you would be unable to continue reading this article. And yet with our eyes shut during sleep, we perceive things so clearly through our inner vision.  Look at the gigantic forces in electricity, gravity or sound waves, all of which go undetected by the human eye, only because they are vibrating at rapid frequencies faster than visible light.

    ( To be Concluded..., )


  This is a Three part series written by Cyrus. The writer is a consultant in motivation and creative  imagination, Pune.

Wednesday, 8 June 2016

தலைப்பில்லா தமிழ் படம்


வளர்ந்துவிட்ட அந்த டைரக்டர், கதாசிரியர், புரொட்யுசர் என் மூவரும் உட்கார்ந்திருந்தார்கள்.டைரக்டர் மட்டும் யோசனையுடன் மோவாயைத் தடவியபடி இருந்தார்.

'என்னப்பா! நோட்டட் டைரக்டர் நீ. நான்கு முன்னணி கதாநாயகிகள், பெரிய மியுசிக் டைரக்டர், நம்பர் ஒன் ஹீரோ, போதாததற்கு சூப்பரான கதை.அதில் கூட கொஞ்சம் சுதந்திரப் போராட்டம் பற்றிய சீன். கண்டிப்பாய் இந்தப் படம் வெற்றி பெறும். ஏன் கவலைப்படறே.'

'அதுக்கில்ல சார்! நம்ப படத்தோட ஓப்பனிங் சீனே ரிப்பன் பில்டிங்குலதான் ஆரம்பிக்குது.அதுக்கு இன்னும் பர்மிஷன் கிடைக்கல'

'அட! இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?'

அன்றைய சாயந்திரத்துக்குள் அனுமதி கிடைக்க வைத்தார்கள்.

ஷூட்டிங் வெற்றிகரமாய் ஆரம்பித்தது.
     
        ##################################

இளைஞர்களை கவர்வதற்காக ஒரு டூயட்டை  பாடலையும், ஹீரோ படத்தின் கடைசியில் பேசும் வசனத்தையும் படமாக்கினார்கள்... ஆஸ்திரேலியாவில்.
எல்லாவற்றையும் எடுத்து முடித்த பின்தான் ஆஸ்திரேலிய அரசு சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது.

எல்லாவற்றையும் இங்கேயே டெவலப் செய்து போட்டுக்காட்டிவிட்டு பின்னர் எடுத்து போங்கள் என்றது ஆஸ்திரேலியா.

புரொட்யுசர் அழாத குறை. ஏற்கனவே எக்கச்சக்கமாய் செலவு செய்தாகிவிட்டது. இங்கேயே டெவலப் செய்வதென்றால் மொத்த சொத்தும் கோவிந்தாவாகிவிடும்.

நிலைமையை எடுத்துக் கூறினார்கள்.

நீங்கள் இராணுவ ரகசியங்களைக் கூட இதன் மூலம் கடத்த வாய்ப்பு உண்டு.ஆகவே, இங்கேயேதான் டெவலப் செய்தாக வேண்டும் என்றது அரசு விடாப்பிடியாய்.

புரொட்யூசர் கொஞ்ச நேரம் யோசித்தார். சரி, இந்தியாவின் நம்பர் ஒன் டெக்னிக்கை கடைப்பிடிக்க வேண்டியதுதான்.

கடைப்பிடித்தார்.

அடுத்த 24 மணி நேரத்தில் படத்தின் பிலிம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியது.

#######################################

M.M.C எனப்படுகின்ற Madras Medical College.

உள்ளே டீன் ஏக இரத்த அழுத்தத்தில் இருந்தார்.

'சார், அதெல்லாம் முடியாது சார். வெறும் காலேஜ் மட்டும்னா பரவாயில்லை, ஷூட்டிங் நடத்திக் கொள்ளலாம். பக்கத்துல ஹாஸ்பிட்டல் வேற இருக்கு. நீங்க பாட்டுக்கு ஒரு நூறு பேரோட வந்து, ஷூட்டிங் எடுக்கறேன்னு சத்தம் போட்டுட்டே இருந்தா, பேஷண்ட்ஸோட நிலைமை என்னாவறது. சாரி சார், ஷூட்டிங் நடத்தறதுக்கு பர்மிஷன் கொடுக்க முடியாது.'

கதாசிரியர் கண்ணைக் காட்டினார்.

'சாருக்கு வேணும்னா பார்மாலிட்டீஸ்லாம் நாங்க பண்ணிர்றோம்.'

'நான் பணமெல்லாம் வாங்கறதில்லே சார்.'

அப்ப வேற ஏதாவது கொடுத்தா வாங்கிக்குவாரா?

யோசித்தார்கள்.

'சார், உங்க பையன் ரொம்ப நாளா ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கணும்னு ஆசைப்படறதா கேள்விப்பட்டோம்.அதை... வாங்கிக் கொடுத்துர்றோம்'

டீன் ஒரு விநாடி யோசித்தார்.

அவர் தலை தானாக அசைந்தது.

##################################

Indian News Reel Office Chennai.

கையிலிருந்த மூக்குக் கண்ணாடியை கழற்றிக் கொண்டே அவர் சொன்னார்.

'ஆமாம் சார், நீங்க சொல்ற டாகுமெண்டரி படம் எங்ககிட்டதான்  இருக்கு. சுபாஷ் சந்திரபோஸ் ஹெலிகாப்டர்ல வந்து இறங்கற மாதிரி சீன். ஆனா தரமுடியாது. உங்களுகு ஏன் சார் தரணும். மேயர்கிட்ட உங்க பர்ப்பஸ் சொல்லி சர்டிபிகேட் வாங்கிட்டு வாங்க. தர்றேன்.'

வெளியில் வந்த டைரக்டரை நோக்கினார் புரொட்யூசர்.

'என்னப்பா, எல்லாத்தையும் அனிமேஷன் செய்துடலாமா?'

'வேணாம் சார். ஏற்கனவே எக்கச்சக்கமான செலவு ஆயிடுச்சு.அந்த டாக்குமெண்டரி படம் இருந்தா அதுக்கு மேலே அப்படியே கிராபிக்ஸ் பண்றது ஈசி. செலவும் கம்மி.'

'என்ன செய்யலாம் இப்போ?'

செய்தார்கள்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த டாக்குமெண்டரியின் இன்னொரு காப்பி அவர்கள் கையில் இருந்தது.

##################################

அந்த அரசாங்க அலுவலகத்தின் அதிகாரி சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

'போஸ்டர் ஒட்டறது, ஹோர்டிங்க்ஸ் மற்றும் கட்அவுட்களுக்கு பர்மிஷன் கிடையாதுன்னு உங்களுக்குத் தெரியாதா சார்? அதுவும் மவுண்ட் ரோடில, 64 அடியில வேற வைக்கணும்னு சொல்றீங்க. முடியாது சார்.'

அவரை முடியும் என்று சொல்லவைத்தார்கள்.

அடுத்த இரண்டு நாளில்--

"காசு கொடுக்காமல் கல்லூரி சீட் வாங்கிய மாணவர்கள்" என்று எழுதப்பட்டிருந்ததின் மேலே 64 அடி உயரத்திற்கு படத்தின் ஹீரோ வித்தியாசமான மேக்கப்பில், மவுண்ட்ரோடில் கட்அவுட்டாய் நின்றிருந்தார்.

###################################

கடைசியில் கிளைமாக்ஸ் எடுக்கவேண்டும் என்று ஏர்போர்ட் போனால் Indian Airlines Airport Authority ஏகக் கடுப்பில் இருந்தார்.

'இல்ல சார். ஏர்போர்ட்லெல்லாம் ஷூட்டிங் எடுக்க முடியாது சார். நீங்க பாட்டுக்கு ரன்வேயில் ஒரு சின்ன கல் போட்டுட்டு போனாக் கூட போதும்.  நூற்றைம்பது மில்லியன் டாலர்ஸ் ஒரு பிளைட்டோட ரேட்டு. அத்தனையும் பஸ்பமாகிவிடும். செட் போட்டு எடுத்துக்குங்க.'

'சார், செட் போட்டுதான் எடுக்கப் போறோம்.ஆனா பாருங்க. படத்தில் ஒரு முக்கியமான சீன் வருது. ஹீரோ ஜீப் ஓட்டிக்கிட்டு வர்றான் சார். அவனுக்கு மேலே நேர்க்கோட்டில் பறந்து வந்து ஒரு பிளைட் இறங்குது சார். செட்ல நாங்க இந்த சீனை எடுக்க முடியாது சார். நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்.'

'என்னுடைய வீட்டுதா இது. கவர்ன்மெண்ட்டோடது சார். சாரி, சான்ஸே இல்லை.'

அடுத்த மூன்று நிமிடம் அவருடன் கிசுகிசுப்பாய் ஏதோ பேசினார்கள்.

நான்கு நாட்கள் கழித்து ஷூட்டிங் நடத்துவதற்கான அனுமதிக் காகிதம் அன்று மாலையே அவர்களின் கைக்கு வந்தது.

###########################################

இப்படி ஏகமாய்க் கஷ்டப்பட்டு, 25 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் வெள்ளி விழாவை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

படத்தின் ஹீரோ மாறுபட்ட வேடத்தில், கையில் கொலைக் கத்தியுடன் டால்பியின் ஆறு பக்க ஸ்பீக்கர்களிலும் மிரட்டிக் கொண்டிந்தார்.

'லஞ்சம் கொடுக்கறதை முதல்ல நிறுத்துங்க. லஞ்சம் கொடுத்தாலும் குத்துவேன், லஞ்சம் வாங்கினாலும் குத்துவேன். லஞ்சம் தராமல் இருந்ததற்காக கடமையை செய்யாது போனாலும் குத்துவேன்.'


############################################


1996ல் அந்த தமிழ்ப் படம் வெளிவந்த போது, அப்பொழுதே நான் எழுதிய கதை இது. படத்தின் பெயர் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

கீழே எழுதுங்கள் பார்ப்போம்!

Tuesday, 7 June 2016

The Power of Imagination

    On your planet you have an animal called bear. It is a larger animal, sometimes larger than you, and it is clever and has ingenuity, and it has a brain as large as yours. But the bear differs from you in one important way. It cannot perform the activity you call imagining.
   
    It cannot make mental images of how reality might be. It cannot envision what you call the past and what you call the future. This special ability of imagination is what has made your species as great as it is. Nothing else. It is not your ape-nature, not your tool-using nature, not language or your violence or your caring for young  or social groupings. It is none of these things , which are all found in other animals.

    Your greatness lies in imagination.The ability to imagine is the largest part of what you call intelligence. You think the ability to imagine is merely a useful stop on the way to solving a problem or making something happen. But imagining it is what makes it happen.

    This is the gift  of your species and this is the danger, because you do not choose to control your imaginings. You imagine wonderful things, and you imagine terrible things, and you take no responsibility for the choice.

    You say you have inside you both the power of good and the power of evil, the angel and the devil, but in truth you have just one thing inside you - the ability to imagine.


   -- Excerpts from the Book "Sphere"  by Michael Crichton.

Monday, 6 June 2016

The Year BC 7012

கி.பி. 7012

ரக்ஷீத் அன்று காலையிலேயே டல்லாக உணர்ந்தாள்.

கொஞ்சம் Happy வேண்டுமென்று ஆர்டர் செய்தாள்.மீண்டும் படுக்கையில் கால் நீட்டி படுத்துக்கொண்டாள்.

அவளுடைய நினைவலைகளைப் புரிந்து கொண்ட Centralized Computer System அவளுக்கு மன அமைதியையும், உடல் அமைதியையும் தருவதற்கேற்றார் போல் படுக்கையின் கோணத்தை மாற்றிக் கொண்டது. ஏஸியின் Temp, Humidity வகையறாக்களை அட்ஜஸ்ட் செய்தது.

'Abbarite' என்றாள் திடீரென்று...

'எஸ், ரக்ஷீத், என்ன வேண்டும் உனக்கு?' - Voice Activated Conversational Computer லைனில் வந்தது.

'Abbarite! எனக்கு இந்த உலகத்தை நிஜமாய் ஒரு முறை சுற்றிப் பார்க்க வேண்டும்.'

'அவ்வளவுதானே! இப்பொழுதே Acroparadise ல் டிக்கெட்ஸ் புக் பண்ணிவிடுகிறேன்.'

'இல்லையில்லை. எனக்கு கால்களால் நடந்து, அந்தக் காலத்து மனிதர்களைப் போல் , கண்களால் நேருக்கு நேராக இந்த உலகைப் பார்க்கவேண்டும்.'

'என்ன ஆயிற்று இன்று உனக்கு ரக்ஷீத், வெளியில் உலகம் என்பது எங்கே இருக்கிறது. முழுவதும் மாசடைந்து போய் ஒரே கதிர்வீச்சு மயமாக அல்லவா இருக்கிறது. யாருமே வெளியில் செல்வதில்லை.கடலில் நியுக்ளியர் வேஸ்ட் கொட்டுவதில் இருந்து, ஓஸோன் லேயர் வரை Environment சரியாக இல்லை.'

ரக்ஷீத் லேசாக முறைத்தாள். ஸ்பீக்கரில் ஒலி தொடர்ந்தது.

'அதற்காகத்தானே இத்தனை வசதிகள். Home Office, Psyche Activated Entertainment என்று எக்கச்சக்கமாய். உன் மன அமைதிக்காக பியானோவில் எதையாவது வாசித்துக் காட்டட்டுமா?'

'வேண்டாம்.'

'சரி, டாக்டரை வேண்டுமானால் கூப்பிடவா'

'ம்கூம். டாக்டர் என்று இன்னொரு Computer Program தான் லைனில் வரும்.'

'சரி, பேச்சு துணைக்கு வேறு யாரையாவது அழைத்து வரட்டுமா. உனக்கு எப்படிப்பட்ட ஆண்மகன் வேண்டும். எந்த வயதில் வேண்டும்.'

'ஐயோ! அதெல்லாம் வேண்டாம். அட்லீஸ்ட் வீட்டைச் சுற்றியாவது ஒரு முறை நடந்துவிட்டு வரட்டுமா?'

'ம்கூம். வேண்டாம். நீ எதையாவது பார்த்து பயந்துவிடுவாய். வேண்டுமென்றால் டிவியில் பார். வெளியே என்ன சூழ்நிலை இருக்கின்றதோ அதை அப்படியே உன் நினைவலைகளுக்கு அனுப்பி புரிய வைக்கிறேன்.'

'நான் ஒன்றும் பயப்படமாட்டேன்.என்னைப் போன்ற தைரியசாலி யாருமில்லை.'

சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. யோசிக்கிறது போலும்.

'சரி, போய்விட்டு வா. மிகச் சரியாக் ஏழு நிமிடங்கள்தான். அதற்குள் வரவில்லையென்றால்  Rescue System ஐ அலெர்ட் பண்ணிவிடுவேன். நீ திரும்பி வருவதற்குள் உனக்கு  Complete Medical Check Up செய்வதற்கு தேவையான வசதிகளை செய்துவிடுகின்றேன். நீ எப்படியும் இரண்டு மணி நேரம்  Quarantine Period ல் இருந்தாக வேண்டும். என்னுடைய Main Cell Program க்கு என்ன பதில் சொல்லப் போகிறேனோ தெரியவில்லை.'

சிறிது நேரம் கழித்து --

கான்க்ரீட்டினால் ஆன முதல் டோரையும், காரீயத்தினாலான இரண்டாம் டோரையும் ஒன்றன் பின் ஒன்றாக திறந்து கொண்டு எல்லா பாதுகாப்பு கவசங்களையும் அணிந்து கொண்டு வெளியில் வந்தாள் ரஷீத்.

உலகம் புதுமையாய் தோன்றியது அவளுக்கு.

சிறிது தூரம் நடந்திருப்பாள்.திடீரென்று அவள் மேல் ஏதோ பறந்து வந்து விழுந்தது.

இதுவரை யாருக்கும் அடங்கியறியாத, அலறல் என்றால் என்ன என்று தெரியாத, பயம் என்ற உணர்ச்சியை அனுபவித்தறியாத ரக்ஷீத் அலறினாள் அந்த ஜந்துவைப் பார்த்தவுடன்--

அது....

காலத்தால் அழிக்கப்படமுடியாத கரப்பான் பூச்சி.

**************************************************



Lord of The Universe

அந்த ​இரவு நேரத்திலும் தூங்காமல் கொட்ட கொட்ட விழித்திருந்தான் விக்கி. வீசிய பனிக் காற்றில் நாசாவின் அந்த பிரம்மாண்டமான கட்டிடம் உறைந்து போயிருந்தது.

விக்கி மெல்ல எழுந்து, கையிலிருந்த டிஸ்போஸபிள் காபி கப்பை தூர எறிந்துவிட்டு, கைகளை உயரே உயர்த்தி சோம்பல் முறித்துக்கொண்டான்.
அதே வினாடி -

அவன் எதிரில் இருந்த மானீட்டர் ட்யூட், ட்யூட் என்று கொஞ்சியது. வினாடியில் புரிந்து போனது விக்கிக்கு.-

பூலோகத்தை நோக்கி ஏதோ ஓன்று மிகப் பெரும் வேகத்துடன் வந்து கொண்டிருந்தது. எதிரில் இருந்த மைக்ரோபோனில் அத்தனை அலைநீளங்களிலும் கத்தினான்.

'This is NASA, Ground Control. Identify Yourself.'

இரண்டு மூன்று முயற்சிகளுக்குப் பிறகும் எந்தவித பதிலும் இல்லாமல் போகவே, எதிரிலிருந்த சிவப்பு பட்டனை அழுத்தினான்.

ஒரு விநாடியின் நூறாயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் ஒரு ராக்கெட் புறப்பட்டது, 20000 மைல் வேகத்தில்.

                                      *************************

தன்னுடைய பறக்கும் கருவியை தாக்க வந்த அந்த பெயர் தெரியாத கருவி சற்று தூரத்தில் தீப்பிழம்பாக உதிர்வதைக் கண்ட அந்த உருவம் ஏகமாய் பயந்து போனது.

நிச்சயமாய் இப்படி ஒரு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை.
அவசரமாய் உயரமிழந்து அது இறங்கிய இடம் ஒரு பயங்கரமான காடு.

பக்கத்தில் என்ன இருக்கிறதென்று கூட தெரியவில்லை.மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டு மூச்சு வாங்கி கொண்டது.

இவையனைத்தும் நான் உருவாக்கியது.நினைவே தித்திப்பாய் இருந்தது.ஏறக்குறைய நானூறு கோடி ஆண்டுகளாகிவிட்டன.

உறவினர்களின் எல்லா எதிர்ப்பையும் மீறி இந்தப் பயணம்.
ஆசை யாரை விட்டது.
அல்லது, விதி யாரை விட்டது.

தூரத்தில் கொஞ்சம் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.

என்னதான் இருந்தாலும் உலகத்தை தானே பார்ப்பது என்பது எவ்வளவு சுகமான விஷயம் என்று நினைத்தபடி, தனக்கு நேரப்போகும் அபாயத்தை அறியாமல் எக்கச்சக்கமான பழைய நினைவுகளுடன் நடக்க ஆரம்பித்தது அந்த உருவம்.

அவர்தான்.....

Enter

The God of the Universe.

                                               *************************

கடவுள் முதலில் அடைந்த இடம் ஒரு கிராமம்.

முதியவர் போல் தன்னை மாற்றிக்கொண்டு மெல்ல வலம் வந்தார். வெயில் பொரிந்து தள்ளியது.தரையில் கால் வைக்க முடியவில்லை.ஒரு சிலர் மட்டும் காலில் ஏதோ அணிந்திருந்தார்கள்.

ஆனால் கடவுளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.தான் வடிவமைத்த உலகம் இவ்வளவு மோசமாய், இவ்வளவு சூடாய் இல்லை.

அமைதியான நதிகளும், ஆர்ப்பரிக்கும் பூக்களும், மென்மையான வாழ்க்கையும்.... அதெல்லாம் எங்கே போயிற்று?

தொண்டை வறண்டது வெயிலின் காரணத்தினால். அருகிலிருந்த கடையை அடைந்து,' கொஞ்சம் தண்ணீர் கொடப்பா' என்றார் கடைக்காரனைப் பார்த்து.

'யோவ்! அதெல்லாம் இங்கே இல்லை, போய்யா.'

'அப்ப அந்த பாட்டிலில் பிடித்து வைத்திருக்கிறாயே, அது என்ன?' கடவுளுக்கு எப்படியாவது தண்ணீர் கிடைத்தால் போதும் என்று இருந்தது.

'பெரிசு, அது மினரல் வாட்டர். லிட்டர் 12 ரூபாய். வந்துட்டானுங்க. சாவு கிராக்கி.'

தண்ணீருக்கு கூடவா விலை.? அடப்பாவிகளா, எப்படி இந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள். தொண்டை நனைய ஒரு வாய் தண்ணீர் கூட தரமாட்டேனென்கிறார்களே என்று நினைத்தபடி தள்ளாடி தள்ளாடி நடக்க ஆரம்பித்தார்.

கொஞ்ச தூரத்தில் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது. பஞ்சாயத்து போலும், ஒட்டு கேட்க ஆரம்பித்தார்.

' கடவுள் மேலே சத்தியமாய் சொல்றேன், நான் எதுவும் திருடவேயில்லை.'

அடப்பாவி, நீதானே நேற்று இரவு திருடினாய். போதாததற்கு பொய் சத்தியம் வேறயா? அதுவும் என் மேலல்லவா சத்தியம் செய்கிறான்.நானல்லவா செத்து போய்விடுவேன். கடவுளுக்கு பயம் அதிகமாகி, அந்த இடத்தை விட்டு போனால் போதும் என்றாகிவிட்டது.

இன்னும் சற்று தூரத்தில் ஒருவன் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

 'அந்தக் கடவுளே வந்து சொன்னாலும் நான் இவளை சேத்துக்க மாட்டேன். கெட்டுப் போனவ, கெட்டுப் போனவதான்.'

அவன் மனைவி சற்று தள்ளி பிள்ளைகளுடன் தேம்பியபடி நின்றிருந்தாள்.

அந்த சாரயக்காரியுடன் சல்லாபம் பண்ணுவதற்கு இந்தக் குடும்பத்துப் பொண்ணை அநியாயமாய் பழி சொல்கிறாயே என்று நினைத்தபடி கடவுள் வேகமாக கடந்தார்.

எப்படியாவது இந்த ஊரை விட்டு ஓடினால் போதும். எதிரே பெரும் சத்தத்துடன் வந்த பஸ்ஸை நிறுத்தி ஏறிக் கொண்டார்.

பஸ்ஸில் பயங்கரக் கும்பல்.ஒரே நாற்றம். மூச்சுக் கூட விடமுடியவில்லை. மயக்கம் வரும் போல் இருந்தது.

கண்டக்டர் எதையோ விற்றுக்கொண்டிருந்தான்.என்னது இது, ஒரு சிறிய பேப்பரை எல்லோரும் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அட்லீஸ்ட் கொஞ்சம் பெரிய பேப்பராகவாவது கொடுக்க கூடதா?

பக்கத்தில் ஒருவன் புலம்பிக் கொண்டிருந்தான்...'ச்சே! ஒரு டூ வீலர் இருந்தா...'

கடவுள் அப்போதுதான் கவனித்தார்.சாலையில் ஏராளமாய் டூ வீலர்கள்.
நகரம் வந்துவிட்டதைக் கண்டு, இறங்கிக் கொண்ட கடவுள், இந்த முறை தன்னை ஒரு இளைஞனாக மார்ப் செய்து கொண்டார்.

எங்கும் ஒரே மக்கள் வெள்ளம். அட, உலகத்தில் இத்தனை பேர் இருக்கிறார்களா என்ன?

எல்லோரும் எங்கேயோ போய்க் கொண்டிருந்தார்கள்.எங்கே ஓடுகிறார்கள்? எதற்கு ஓடுகிறார்கள்?

இனிமையாய் பூபாள ராகம் இசைத்து, அமைதியாய் வேலை செய்து, மாலையில் இயற்கையை ரசித்து, ஏகாந்த வேளையில் இன்பமாய் கலந்து, தன்னை மறந்து உறங்கி.....
நான் வடிவமைத்துக் கொடுத்த வாழ்க்கை எங்கே?

திடீரென்று ---
தொடையில் ஒரு கீறல்.
ஏகமாய் இரத்தம்.
வலி தாங்க முடியவில்லை.
பணத்திற்காக யாரோ பிளேடு போட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.இந்த பணம் எப்படியிருக்கும்.? பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

ஒரு டூ வீலரை உருவாக்கி அதன் மேல் உட்கார்ந்தபடி ஓட்ட ஆரம்பித்தார்.ஏறக்குறைய குதிரை ஓட்டுவது போல் இருந்தது.'ஹாய், ஹாய்' என்று இலேசாக சத்தமிட்டபடி, மற்ற வண்டிகள் நிற்பதைக் கவனிக்காமல் கொஞ்ச தூரம் போனதும் --

வெள்ளை உடை அணிந்த ஒரு அர்சாங்க சேவகன் வழிமறித்தான்.

'லைசென்ஸ் இருக்கா?'

அப்படின்னா என்ன! கடவுளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

'சிக்னல் ரெட்ல இருக்கிறப்ப, நீ பாட்டுக்கு ஓட்டிகினு வர்ற, இது இன்னா உன் அப்பன் வீட்டு ரோடுன்னு நெனப்பா? நூறு ரூபா கொடு இல்லேன்னா மொபைல் கோர்ட் வரும் , ஐநூறு ரூபா கட்டிட்டு போ, எப்படி வசதி?'

கடவுள் எக்கச்சக்கமாய் பயந்து போனார். ஏதோ கோர்ட், கீர்ட் என்கிறான், வயிறு கலங்குவது போல் இருந்தது.

எதிரே திரும்பிப் பார்த்தார்.
'இன்ப வேளை - இளைய தேவதையின் இனிமையான அசைவில்' என்றபடி ஒரு பெரிய போர்டு.
ஆகா, கலை எப்படி வளர்ந்துள்ளது பார்க்கலாம். அதற்கு முன்னால் இந்த போலீஸ்காரனிடமிருந்து தப்பவேண்டுமே, எப்படி?

Disappear --
The God of the Universe.

*******************************

இன்ப வேளை என்ற அந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக உள்ளே நுழைந்தார் கடவுள். மற்றவர்கள் கையில் வைத்திருந்ததைப் போல ஒரு டிக்கெட்டை தருவித்துக் கொண்டார்.

தியேட்டர் முழுவதும் பயங்கரமான கூட்டம்.

முதலில் ஒரு சாமி சிலையை காண்பித்தார்கள்.கடவுளுக்கு ஒரே சந்தோஷம்.அட! தான் இவ்வளவு அழகாக இருக்கிறோமா என்ன?
ஆனால், அதற்குப் பின்னால் வந்த காட்சிகள்.... ஆதாமும் ஏவாளும் கூட அதிகமாய் உடை அணிந்திருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிண்ணனி இசையுடன் மழையில் அந்த ஆட்டம் சுகமாய்த்தான் இருந்தது.
கடவுளுக்கு பிண்ணனி இசை பிடித்துப் போனது.இத்தனை நாட்களாக வெறும் ஒற்றை வயலின் வாசித்து தன்னை எல்லோரும் ஏமாற்றிவிட்டார்களோ?

திரையில் எல்லோரும் அழகாய் இருந்தார்கள். சிவப்பாய், புஷ்டியாய்...
ஆனால் அவர்கள் எல்லோரும் நிஜத்தில் அப்படி இல்லை என்பது கடவுளுக்கு புரிந்தது.

ஆனாலும் இப்படி....,

ஒரு பொய்யை நிஜமாய் எப்படி காண்பிக்கிறார்கள், அதுவும் நம்பும்படி.
கடவுளுக்கு முதல் முறையாய் பயம் வந்தது.

தன்னால் முடியாததை இந்த காமிரா செய்துவிடுகின்றது.
தன்னால் தரமுயாத சந்தோஷத்தை இந்த இசை தந்துவிடுகின்றது.

அப்படியென்றால்....அப்படியென்றால்.....?

நான் பெரியவன் இல்லை.
என்னை விட சில பெரிய விஷயங்களும் இருக்கின்றன.

கடவுளின் ஈகோ முதல் முறையாய் உடைந்து போனது.
தன்னைப் பற்றிய பயம் வந்தது.

தான் பெரிய ஆள் இல்லை என்ற நிஜம் உரைக்க ஆரம்பித்தவுடன்....
இந்த இடத்தை விட்டு ஓடினால் போதும் என்றாகிவிட்டது.

ஒரு வேளை டைரக்டர் என்னை விட பெரியவனோ?

பயம்.... பயம்....
ஓடு......  ஓடு......

Disappear.....
 The God of the Universe.

****************************

வாசலில் நின்றிருந்த வாட்ச்மேனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, 'இன்பவேளை' கதாநாயகியின் வீட்டிற்குள் நுழைந்தார் கடவுள்.

நடிகை இவரைப் பார்த்தவுடன் மலர சிரித்தாள்.
ச்சே! என்ன அழகு! இவள் எல்லாம் ஏன் சொர்க்கத்துக்கு வருவதில்லை.

அழகான பெண்களை எமன் நரகத்திற்கு கூட்டிச் சென்று விடுகிறான் போலிருக்கிறது. சுயநலவாதி. முதலில் அவனை வேலையை விட்டு நிறுத்தவேண்டும்.

'வாங்க, வணக்கம். நீங்கள்தானே அந்த ப்ரொட்யுசர்?'
நடிகையின் குரலில் தேன் வழிந்தது.

ஓஹோ! ப்ரொட்யுசராக இருந்தால்தான் பேசுவாள் போலிருக்கிறது.

'இல்லை'

'பின்னே என்ன விஷயமாய் என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள்?'

கடவுள் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே, ' உன்னை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று...'

இதைக் கேட்டவுடன் நடிகை ஒரு வினாடி மௌனமாய் இருந்தாள்.

'நீங்கள் என்ன ஃபாரினில் தொழிலதிபரா?'
'இல்லை'

'அரசியல்வாதியா?'
'இல்லை'

'அட்லீஸ்ட் ஒரு டைரக்டரா?'
'இல்லை'

'ஊட்டியில் இரண்டு எஸ்டேட், அடையாறில் அட்டகாசமான பங்களா, ஒரு ரோரிங் பிஸினெஸ் என்று ஏதாவது உண்டா?'

கடவுள் இல்லை என்பது போல் தலையசைத்தார் சோகமாய்.

'பின்னே நீங்கள் யார்?'
'நான்தான் கடவுள்!'

இதைக் கேட்டவுடன் நடிகை பயங்கரமாய் சிரிக்க ஆரம்பித்தாள்.

'யோவ், முதல்ல வெளில போய்யா. இந்த வாட்ச்மேனை வேலையைவிட்டு நிறுத்தணும். சரியான பைத்தியங்களையெல்லாம் உள்ளே அனுப்பறான்.' என்றபடி கடவுளை வெளியே தள்ளி கதவை சாத்தினாள்.

கடவுளுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.

ஓடு..... ஓடு........

Disappear
The God of the Universe.

************************************
 மியுசிக் அகாடமியில் ஏதோ இசை நிகழ்ச்சி என்றவுடன் மாலைப் பொழுதை அங்கு கழிக்கலாம் என்றபடி அடைந்தார் கடவுள்.

நடந்துவந்த இவரை ஒரு பயல் மதிக்கவில்லை. ஒரு வேளை இம்போர்டட் காரில் வந்தால் மதிப்பானோ என்னவோ!

உள்ளே நுழைந்ததும் மீண்டும் அந்த ஈகோ தலை தூக்கியது.

'நானே வேதம், நானே நாதம்.'
'வேதம் நீ, இனிய நாதம் நீ' என்ற தன்னைப் பற்றிய பாட்டு மனதில் ஓடியது.

ஆனால் நடந்தது வேறு.

அன்று நடந்தது ஜாஸ் இசை நிகழ்ச்சி.

எப்படி இத்தனை பேர் ஒருமித்து வாசிக்கிறார்கள், அதுவும் எதையும் பார்க்காமல்.
வாசிப்பவன் கிடாரை சாப்பிட்டுவிடுவான் போலிருந்தது.

ஒரு வேளை மனிதன்தான் தன்னைவிட பெரியவனோ?

*************************************

அடுத்து வந்த இரண்டு மூன்று நாட்களில் கடவுளின் குழப்பம் எல்லை மீறியிருந்தது.

ஒரு புறம் எக்கச்சக்கமான செல்வம், மறுபுறம் பசியால் சாவும் கொடுமை,
எங்கும் ஒரே கூட்டம், நிம்மதியான உறக்கமின்மை, கொலை, கொள்ளை, எங்கும் பணம், எதிலும் பிஸினெஸ்....

இந்த புறம் டெக்னாலஜி, புதிய கருவிகள், தொழிற்சாலைகள், புகை, நோய்கள் etc...

இவற்றிற்கிடையில் கனவை விற்கும் சினிமா, பாட்டு, பத்திரிக்கை etc..

தான் கூட விலை போகிறோம் என்பது கடவுளுக்கு புரிந்துவிட்டது.

இவ்வளவு கஷ்டங்களுக்கும் இடையில் எப்படி உயிர் வாழ்கிறார்கள்.என்ன ஒரு மனோ திடம் இந்த மனிதர்களுக்கு.

என்னை விட இவர்கள்தான் பெரியவர்கள்.

பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.

இந்த உலகத்தில் எத்தனை விஷயங்கள் நடக்கின்றன.எல்லாவற்றையும் நான்தான் கண்ட்ரோல் பண்ணுகிறேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், அதெல்லாம் இல்லை என்று தெரிந்துவிட்டது.

என்னையே ஒருவன் புதிய கருவி கொண்ட்டு தாக்குகிறான்.

கடவுளுக்கு இந்த ஸ்ட்ரக்ச்சர் புரியவேயில்லை.
எனக்கே புரியவில்லையென்றால்....
இந்த மனிதர்கள் எப்படி...?

தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளவேண்டும் போல் இருந்தது.

தரையில் கிடந்த கோலா டின்னை எட்டி உதைத்தார்.

நிஜமாகவே பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன...!

******************************

                                    தேவலோக மருத்துவமனை

இரண்டு பிள்ளைக்குத் தாயானவள், இவள் எல்லாம் ஒரு அழகா? இவளுக்குத்தான் எத்தனை திமிர். என்னில் பாதியாமே. நானே யாரென்று தெரியவில்லை.இதில் இவள் வேறா?

ஒரு நடிகை எவ்வளவு அழகாக இருக்கிறாள்.இதுதான் செவன் இயர் இட்ச் என்பதோ. ச்சே! தான் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா. வந்த கோபத்தில் மனைவியை எட்டி உதைத்தார் 'சர்த்தான் போடி...'

கடவுள் ஏற்கனவே தன் பதவியை தூக்கி எறிவதாக அறிவித்துவிட்டிருந்தார். தன் மகன்களைக் கூப்பிட்டு,' மகனே! இந்த அண்டத்தில் நீ என்னவாக வேண்டுமானாலும் இரு. ஆனால் கடவுளாக மட்டும் இருந்துவிடாதே.போ'
என்று சொல்லி அனுப்பினார்.

பக்கத்திலிருந்த மனைவியை மீண்டும் உதைக்க ஆரம்பித்தார். அந்த சக்தி அழுதுகொண்டே ஓடினாள், மருத்துவரைக் கூப்பிட.

மருத்துவர் விரைந்து வந்தார்.

'வைத்தியரே, என் நாதன் இரண்டு மூன்று நாட்களாய் பூலோக விஜயத்துக்குப் பின் இப்படித்தான் காட்டுமிராண்டித்தனமாய் நடந்து கொள்கிறார். நீங்கள்தான் அவரை எப்படியாவது ரஷிக்கவேண்டும்.'

அந்த பச்சிலை வைத்தியர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

' தாயே! நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இறைவனின் மனம் பேதலித்துவிட்டது.இன்னும் சொல்லப் போனால் அவருடைய சிறுநீரகத்தைக் கூட யாரோ திருடிவிட்டார்கள். அவருடைய மனதில் சஞ்சலங்கள் அதிகமாகிவிட்டன.'

'இதற்கு வேறு வழியே இல்லையா?'  இறைவி தாக்கத்துடன் கேட்டாள்.

'இருக்கிறது. இந்த மாதிரி நோய் நொடிகளை சரியாக்க ஒரே இடம்தான் இருக்கின்றது. அமெரிக்காவிற்குப் போனால் இந்த வியாதி குணமாக வாய்ப்பு உண்டு.'

'இந்த அமெரிக்கா என்று சொன்னீர்களே அது எங்கே இருக்கிறது?'

'பூலோகத்தில்' என்றார் வைத்தியர்.

'திரும்பவும் பூலோகத்துக்கா....?' என்றபடி கடவுள் அலறிய அலறல் அந்த பிராந்தியம் முழுவதும் எதிரொலித்தது.

******************************************